Monday, 30 July 2018

பெருந்திணை

முகத்திற்கேற்ற விழிகளாக
உன் காதலன் நோக்காக்கால்
நிலைகொள்ளாது ததும்பி
எனை நோக்கும்
அவ்விழிகளை வரைவேன்
பின்பு அவ்வோவியத்தை
சுக்குநூறாக கிழித்தெறிவேன் 

Monday, 5 February 2018

கேவல்

தழுவிச்  செல்லும் 
காற்றின் புரடியை பற்றி இழுத்து
அதன் மென்னியை
மெல்லத் திருகுங்கள்
செவிப்பறையில் செல்லும்
அதிர்வலைகளில் மட்டும்
கிளர்ச்சி
கோபம்
ஸ்கலிதம் மற்றும் இன்ன பிறவற்றை
நீங்கள் மரணிக்கும் வரை
கேட்டுக்கொண்டிருக்கலாம்
ஒருக்காலும் பிடியை
தளர்க்கசொல்லாது.

Wednesday, 17 January 2018

பிரபஞ்ச தரிசனம்

கடந்து சென்ற
அந்த ஓரிரு நொடிகளை
ஒன்று புள்ளி நான்கு நான்காம்(1.44) முறையாக
நினைவு கூர்கையில்
எடை தாளாமல்
மஞ்சள் நிறக்கலவையாய்
வெடித்துச் சிதறினேன்
அதில் ஓர் சிட்டிகை எடுத்து
கண்ணக் கதுப்புகளில் பூசி
கோயிலுக்கு செல்கிறாள்
அடேய் மண்டையா
உன் பிரபஞ்ச தரிசன
பிதற்றல்களை கக்கத்தினுள்
ஒளித்து வைத்துக்கொள்

காதல் கலவி மரணம்


இன்னும் சில மணிநேரத்தில்
தினங்களில் அல்லது வாரங்களில்
எண்ணிலடங்கா மீளுருவம்
பெறா கூறுகளாய் மாறும்
அக்கணத்தை பலவாறு
மீட்டுருவாக்கம் செய்தேன்
அக்கணம் இம்மீட்டுருவாக்கங்கள்
அல்லாத வழியில் தானென்று
எனக்கு சர்வநிச்சயமாகத் தெரியும்.

தராசு

 அவன் யாசிக்கும் பொழுது இல்லை என சுலபமாக மறுக்கலாம் நியாய தராசில் நமக்கான காரணங்களை அடுக்கி  முள்ளை நம் பக்கம் வளைக்கலாம் குப்பைத்தொட்டியி...