Saturday, 11 April 2020

மௌனக்குமிழி

நம்மிருவருக்கும் இடையே
தர்ஜனி முத்திரையில்
சம்மணம்மிட்டு அமர்ந்திருக்கும்
மௌனக்குமிழியை உடைக்கும்
பாடலை கேட்கத் துவங்கினேன்

உன்மேல் கொண்ட
வன்மங்களை அள்ளி
தூரிகையால் விசிறி
உன் இறைஞ்சும் கைகளை
குமிழியின் மேல் வரைந்து
முகம் புதைத்துக் கொண்டேன்

குரல்வளை மெல்ல இறுக
அப்பாடலின் இசை
இனிதே துவங்கியது  

தராசு

 அவன் யாசிக்கும் பொழுது இல்லை என சுலபமாக மறுக்கலாம் நியாய தராசில் நமக்கான காரணங்களை அடுக்கி  முள்ளை நம் பக்கம் வளைக்கலாம் குப்பைத்தொட்டியி...