Thursday, 12 December 2019

Offended

உன் சுகந்தத்தை
சட்டென நிறுத்தி
கள்ளக்கோப குழந்தையின்
கண்களை கொண்டு
நீ புண்பட்டதாக சொல்லும்
இந்த விளையாட்டை
தினம் நடத்துகிறாய்
ரதியின் ஒக்கலில் அமர 

Tuesday, 2 July 2019

Sell Me This Pen

உள்கனன்றெழும் சினத்தை
நான்கு தங்க  வட்டிலில் வைத்து
விற்பனைக்கு காத்திருந்தேன்
முதலில் வந்த உஷை
ஓர் விண்டு அள்ளி வாயிலிட்டு
ஐயோ காமம் என அலறினாள்
வருணனனோ தங்க வட்டிலில்
வைத்து விற்கும் போதே தெரிகிறது
உன் தாழ்வுணர்ச்சி என்கிறான்
மீதம் இரண்டையும்
துக்கம் தாளாமல்
நானே உண்டுவிட்டேன்

Thursday, 21 March 2019

பிறன்மனை

எதிர்ரெதிரே அமர்ந்திருக்கும்
நம்மிருவரிடையே தேங்கிநிற்கும்
காற்றை உறிஞ்சி வெற்றிடமாக்கி
கூச்சலிட்டு ஆனந்த களியாடும்
நம் உடல்களை வள்ளுவன்
எழுத்தாணியால் வழுக்கு தடம்
போட்டு நாற்காலியை எட்டி உதைத்து/தான்

1)சொன்னான் "அறம் என்னும் கிரீஸ்
     டப்பாவை எப்படி உதைத்தாய் என்று?"

2)அங்கே நடனமாடும் கால்களின்
    இசையே தற்பொழுது நாமிருவருக்குள்ளும்
    இட்டு நிரம்பியிருக்கிறது 

தராசு

 அவன் யாசிக்கும் பொழுது இல்லை என சுலபமாக மறுக்கலாம் நியாய தராசில் நமக்கான காரணங்களை அடுக்கி  முள்ளை நம் பக்கம் வளைக்கலாம் குப்பைத்தொட்டியி...