Monday, 2 October 2017

சென்னை டூ கோவில்பட்டி (1)

திருமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் அறைதோழரிடம் சாப்பிட மறந்ததை தெரிவிக்கையில்

" அருண்ன பார்க்க போற சந்தோசத்துல்ல சாப்புட மறந்துடீங்களா "

"இந்த மாதிரி பீடையெல்லாம் ஒழிஞ்சிரும்னு நினச்சா,பார்க்க போறப்ப கரெக்டா ஆரம்பிக்குது.இரத்த காவு வாங்காம திரும்பி வந்துரனும்டா  சாமி"

பயணமானது ஆயுத பூஜையின் முன்தினம் காலை ஓன்பது மணி அளவில் தொடங்கியது.கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நுழைத்ததும் ஆவினில் ஒரு பாதாம் பால் வாங்கி சாப்பிட்டுவிட்டு,மதுரை செல்லும்  பேருந்துகள் நிற்கும் வரிசையை நோக்கி நடந்தேன். முன்பதிவு செய்த புண்ணியவான்கள் பேருந்தில் ஏறி இறங்கியபடி இருக்க,அகால நேரத்தில் பயணம் செய்ய முடிவெடுத்தவர்கள் நடத்துனரையே வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தோம்.ஒரு திறமைசாலி டீயும் வடையும் வாங்கிகொடுத்து இருக்கையை உறுதி செய்துகொண்டார்.கடைசி வரைக்கும் நமக்கு இந்த நேக்குபோக்கு நமக்கு வரபோரதுல்ல.மணி 9.50 வரை நிற்கவைத்து "சீட் இல்லப்பா" என வானத்தை பார்த்து சொன்னார். அட சண்டாளப்பாவி என மனதில் கருவிக்கொண்டே எதிர் வரிசையில் நின்ற திருச்சி பேருந்தில் ஐக்கியமானேன்.

பேருந்து பூ மார்க்கெட்,பழ மார்க்கெட்,காய்கறி மார்க்கெட் என ஒரு மணி நேரம் கோயம்பேடயே  சுற்றிகொண்டிருந்தது. வாழை கன்றும்,வெள்ளை பூசணியும் குவித்து வைத்திருந்தார்கள்.பன்னெண்டு மணி வாக்கில் பேருந்து மாநகர எல்லையை தாண்ட வயிற்றுக்குள் சிறு குமுறல்.சற்றே தூங்கி சமாதானபடுத்த எத்தனிக்கையில் டோல்கேட்டில் பேருந்து நின்றது.சுண்டலும்,அவித்த வேர்கடலையும் விற்றுக்கொண்டிருந்தார்கள்.பொது இடங்களில் உணவருந்துவது எனக்கு அவ்வளவு வசதியாக இருக்காத காரணத்தாலும், பசியில் இருந்த காரணத்தாலும் குழம்பிகொண்டிருக்கையில் சகபயணி சுண்டல் வாங்கிவிட்டார் பேருந்தும் டோல்கேட்டை தாண்டிவிட்டது.அடுத்த டோல்கேட்டில் வாங்கிக்கொள்ளலாம் என மனதை தேற்றிகொண்டே தூங்கிபோய்விட்டேன்.

கண்விழித்து பார்க்கையில் இம்முறை வேர்கடலையுடன் காட்சி தந்து புன்னகையும் புரிந்தார் சகபயணி.இனிமேல் எப்படி தூக்கத்தை தொடர்வது,மணி வேறு  ஒன்றாகியிருந்தது.பக்கவாட்டில் அமர்ந்திருத்த தம்பதியினர் பேருந்தினிள்ளே கைகழுவி கட்டுசாதத்தை பிரித்தனர்.அவர்களுக்கு முன்னிருக்கையில் அமர்திருந்த அம்மாள் ஆரஞ்சு பழத்தோலை  உரித்து கீழே போட்டுக்கொண்டிருந்தாள்.சகபயணி அவர் பங்கிற்கு கடலை தோலை ஊதிகொண்டிருந்தார்.பின்னிருக்கை இசை பையித்தியம் ஒன்று உச்சஸ்தாயியில் "அரச்ச சந்தனம் அழகு குங்குமம்"தை அலறவிட்டுக்கொண்டிருந்தது.பேருந்து உணவகத்தில் நின்றபொழுது பசி பாதி போய்விட்டது. சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது (கோயம்பேடில் பார்த்த ) அதே திறமைசாலி வந்து 'சாப்பாடு டேஸ்டா இருக்கானு' கேட்டார்.இதுதான் பழிவாங்க சரியான இடம்னு பார்த்து 'நல்லாலிருக்குனு' சொல்லி வைத்தேன்.பண்ணிய  பாவத்துக்கு தண்டனையா 90 ரூபாய் பில்லுக்கு நூறு ருபாய் வாங்கி 'தேங்க்ஸ்'சொல்லிட்டு போய்ட்டார் சிப்பந்தி.மறுபடியும் ஒரு குட்டி தூக்கத்தை போட்டு திருச்சி வந்து சேர்ந்தேன்.

திருச்சியிலிருந்து மதுரை செல்லும் பேருந்தில் மிதமான கூட்டம் தான்.பக்கத்தில் அமர்ந்திருந்த தம்பி கேட்டுச்சி 'படிக்குரீங்கலானு' (முடி மட்டும் கொட்டாம இருந்துதுனா இன்னும் பத்து வருஷம் ஸ்டுடென்ட்னு சொல்லி ஓட்டிடலாம் போலயேன்னு) 'ஆமானு' தலையை ஆட்டிவைத்தேன்.ஒத்தக்கடையில் பத்து அடி தூரத்துக்குள் ஒலிபெருக்கிகள் வைத்து அலறவிட்டு அதை விட சத்தமாக பேசிகொண்டிருந்தனர் மண்ணின் மைந்தர்கள்.மாட்டுத்தாவணியில் இறங்கியதும் கிட்டவந்து ஒருவர் "சென்னை சென்னை" என்றார்.

 "இல்லனா"

"ஏசி,நான் ஏசி,ஸ்லீபேர்,செமி ஸ்லீபேர் "

"சென்னைலேர்ந்து தான்னா வரேன்"





Wednesday, 6 September 2017

துர்மரணங்கள் (2)

உணவூட்டி திரும்புகையில்
மின்விசிறியில் சிக்கிய பறவை
காருக்கு அடியில் கழுத்தறுபட்ட
நிலையில் இரு  பூனைக்குட்டிகள்
மறுநாள் அதே இடத்தில்
சயனித்திருந்த  தாய்ப்பூனை
இவை எல்லாவற்றிலும்
 உனது மரணத்தின் சாயல்
வந்து தொற்றிக்கொள்ளுகிறது
ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்குழம்பை
தூக்கி  வைக்கும் கரித்துணியில்
எங்களது ரத்தக்கறை
படிந்த கைகளை துடைத்துக்கொள்கிறோம்

(சரண்யாவிற்கு )

துர்மரணங்கள்(1)

உனது திருமணம்
இந்துமுறைப்படியா கிருத்துவமுறைப்படியா
விவகாரத்தில் கையொப்பமிட்ட 
பேனாவின் மை கருப்பா நீலமா
பேருந்துப் பயணத்தின்போது
அழுதாயா உறங்கினாயா
உனது மரணம்
தற்கொலையா கொலையா
இவை எதுவும் எனக்கு தெரியாது
தலைக்கு எண்ணெய் வைத்தால்
உனது காதலன் போல் அழகாக
இருப்பேன் எனத் தெரியும்
விரல் இடுக்குகளில்
தினமும் நீ
ஒளிந்துக்கொள்வதும் தெரியும்.

Saturday, 28 January 2017

Guilty

A new wind enters
The routine city with euphoria
It brings memories blossoms
To notice his existence
A few rejoice and few melancholy
Still none notice
This time with a vengeance
It carries their farts
And stuck in cul-de-sac
Stays a while and leaves
The routine city with guilty
Like a mad-dog driven man.


புல்ஷிட்

என் கை மயிர்கள் இடையே
புகுந்து சென்ற காற்று
எடுத்து சென்ற நினைவுகளை வைத்து
கவிதை எழுதத் தொடங்கி
சற்று தடுமாறி மேலெழும்பி பின்
காலடியில் வைத்து சொன்னது
"உன் நினைவுகள் புல்ஷிட்"

Orion Constellation


கார்காலப் பின்னிரவில் ஏந்திய
வில்அம்புடன் நிற்கிறான் வேட்டைக்காரன்
எல்லாரும் வேட்டையாடிய
சிறகின் மூலம் காற்றில்
தன் வாழ்க்கையை எழுதிய
அச்சிறுப் பறவையை கூட
அவன் வேட்டையாடியதில்லை
ஆனாலும் அவன் வேட்டைக்காரன்
வேட்டையிடாத வேட்டைக்காரன்

நோன்பு துறத்தல்






அழகியே
இவ்விரதம் எல்லா வியாழன்களை போலல்லாமல்
பதினாறு ஆண்டுகள் நீளமானது
பேரழகியே அப்பொழுது
நினைவிலியில் கண்கள் கண்ட
கதலிப்பூவின் தேன் நாவின்
சுவையரும்புகளில் தீ பற்றவைக்கும்
கன்னங்களில் நேர்கோடாய் செல்லும்
அத்துளிகளை திரட்டி தடித்த
சட்டத்தின் மீது வா எறிவோம்


(ஐரோம் ஷர்மிளாவிற்கு)


தராசு

 அவன் யாசிக்கும் பொழுது இல்லை என சுலபமாக மறுக்கலாம் நியாய தராசில் நமக்கான காரணங்களை அடுக்கி  முள்ளை நம் பக்கம் வளைக்கலாம் குப்பைத்தொட்டியி...