அவன் யாசிக்கும் பொழுது
இல்லை என சுலபமாக மறுக்கலாம்
நியாய தராசில்
நமக்கான காரணங்களை அடுக்கி
முள்ளை நம் பக்கம் வளைக்கலாம்
குப்பைத்தொட்டியின் அருகில்
அவன் செல்லும்பொழுதே
அத்தராசுகள்
குலைந்து நடுங்கிவிடும்
ஓரு விண்டு அள்ளி
வாயில் வைத்ததும்
அவனை ஓடிச்சென்று
கட்டிக்கொள்ளும் தராசுகள்
அனைத்திலும் முட்கள் இல்லை
No comments:
Post a Comment