அழகியே
இவ்விரதம்
எல்லா வியாழன்களை போலல்லாமல்
பதினாறு
ஆண்டுகள் நீளமானது
பேரழகியே
அப்பொழுது
நினைவிலியில்
கண்கள் கண்ட
கதலிப்பூவின்
தேன் நாவின்
சுவையரும்புகளில்
தீ பற்றவைக்கும்
கன்னங்களில்
நேர்கோடாய் செல்லும்
அத்துளிகளை
திரட்டி தடித்த
சட்டத்தின்
மீது வா எறிவோம்
(ஐரோம் ஷர்மிளாவிற்கு)
No comments:
Post a Comment